Skip to main content

Posts

Showing posts from October, 2018

தொகுப்பு 1 - 'ஆந்த்ரோபோசீன் அல்லது பூமியின் நீண்ட கால வரலாற்றில் மனிதனின் கால்தடம்'

எப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை சிதைவுகளுக்கும் மீள முடியாத பரவலான பல்லுயிர் உயிரின வீழ்ச்சிக்கும் நாம் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் காரணம் என்ற கூற்று வலுத்து வருகின்றது. மனிதர்களாக நாம் இந்த பூமியில் நிகழ்த்தி வரும் மீள முடியாத மாற்றங்கள் எவ்வாறு இயற்கையை பாதித்து வருகின்றது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான சான்றுகளும் ஆராய்ச்சிகளும் வலுத்து வருகின்றது.இதே போன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் புறக்கணிக்கமுடியாத   குரலும் வலுத்துள்ளது . இதையும் தாண்டி உலக நாடுகளில் அரசியல் பொருளாதாரம், மக்களின் நகர்புறத்தை நோக்கிய இடம் பெயர்தல், போர் மற்றும் வறட்சி வெள்ளங்களால் ஏற்படும் புலம் பெயர்தல் ஆகிய வற்றை சுற்றுச்சூழல் மாற்றங்களுடன் ஒருங்கிணைத்து பார்க்கும் மனப்பாங்கு பெருகிவருகின்றது. இது இயற்கை சூழல் மாற்றத்தை நேரடியாக இந்த பூமியில் ஒட்டு மொத்த மானுட வளிர்ச்சியுடன் ஒப்பிடும்  விளக்கத்தை மேலும் ஆழமான மற்றும் சிக்கலான கேள்விகளுக்கு உள்ளாக்கி வருகின்றது. இந்நிலையில் நம்மை பெரிதும் பாதிக்கும் இந்த மாற்றங்களின் வரலாறு நமது சில கேள்விகள...