Skip to main content

Posts

Showing posts from June, 2019

இருப்பை இழந்து நிற்கும் இலுப்பை

தேனினை விரும்பி உண்ணும் கரடிகள் , கூட்டம் கூட்டமாக ஒரு மரத்தை நோக்கிச் செல்கின்றன , குட்டி ஈன்ற தாய் கரடி கூட தனது கூட்டத்துடன் அந்த மரத்தை நோக்கிப் பயணப்படுகிறது. மரத்தின் கீழே கொட்டிக்கிடக்கிற பூக்களைத் தின்றுவிட்டு , இன்னும் சுவையான பூக்களை நாடி மரத்தின் மீது ஏறி சுவைமிகுந்த பூக்களை உண்டு கிளைகளில் படுத்துக்கிடக்கின்றன. இந்தக் காட்சி D iscovery Channel – ல் வரும் நிகழ்ச்சி அல்ல , நமது மரபு இலக்கியமான சங்க இலக்கியத்தொகுதியில் ஒன்றான அகநானூற்றில் இலுப்பைப் பூ பற்றி இடம்பெறும் இலக்கிய சாட்சி. சங்க இலக்கியத்தில் இருப்பை என்றழைக்கப்படுகிற இலுப்பை தமிழகத்தின் நிலவெளியில் குறிப்பிடத்தகுந்த ஒரு தாவரமாகும். ஆனால் , இன்று இலுப்பை மரம் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறது. கரடிகளைக்கூட கவர்ந்து   இழுத்த இந்த மரம் இன்று கவனிக்கப்படாமல் கேட்பார் அற்று கிடப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்கிறது இந்தக்கட்டுரை. இயற்கையோடு இலுப்பை தமிழர்கள் இயற்கையின் மீது வன்முறையைச் செலுத்தாது இயற்கையோடு இணைந்து இனிமையாக வாழ்ந்த காலப்பகுதியின் இலக்கிய சாட்சியங்கள் சங்க இலக்கியங்