எப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை சிதைவுகளுக்கும் மீள முடியாத பரவலான பல்லுயிர் உயிரின வீழ்ச்சிக்கும் நாம் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் காரணம் என்ற கூற்று வலுத்து வருகின்றது. மனிதர்களாக நாம் இந்த பூமியில் நிகழ்த்தி வரும் மீள முடியாத மாற்றங்கள் எவ்வாறு இயற்கையை பாதித்து வருகின்றது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான சான்றுகளும் ஆராய்ச்சிகளும் வலுத்து வருகின்றது.இதே போன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் புறக்கணிக்கமுடியாத குரலும் வலுத்துள்ளது.
இதையும் தாண்டி உலக நாடுகளில் அரசியல் பொருளாதாரம், மக்களின் நகர்புறத்தை நோக்கிய இடம் பெயர்தல், போர் மற்றும் வறட்சி வெள்ளங்களால் ஏற்படும் புலம் பெயர்தல் ஆகிய வற்றை சுற்றுச்சூழல் மாற்றங்களுடன் ஒருங்கிணைத்து பார்க்கும் மனப்பாங்கு பெருகிவருகின்றது. இது இயற்கை சூழல் மாற்றத்தை நேரடியாக இந்த பூமியில் ஒட்டு மொத்த மானுட வளிர்ச்சியுடன் ஒப்பிடும் விளக்கத்தை மேலும் ஆழமான மற்றும் சிக்கலான கேள்விகளுக்கு உள்ளாக்கி வருகின்றது.இந்நிலையில் நம்மை பெரிதும் பாதிக்கும் இந்த மாற்றங்களின் வரலாறு நமது சில கேள்விகளுக்கான விடைகளையும் நமது செயல்களின் விளைவுகளையும் முழுமையாக புரிந்து கொள்ள உதவும்.
(Image Source: Ancient Egyptian Hoe and Plough -Wiki Commons ) |
இது போன்ற இயற்கையின் அழிவை மனித சமூகத்தின் வளர்ச்சியுடன் நேரடியாக தொடர்பு படுத்தும் போது பயன்படுத்தப்படும் ‘Anthropocene’ எனும் வார்த்தை புரிந்து கொள்வது மிக அவசியம்.
இது உதாரணமாக மனிதன் முதன் முதலில் நெருப்பு, சிறு கருவிகள் மற்றும் உலோகத்தின் பயன்பத்திய காலத்தில் இருந்து தொடங்கியது.பின்னர் ஒருங்கிணைந்து இயங்கும் சமூக பண்புகளை வளர்த்து கொண்ட வரலாற்று காலத்தின் தொடக்கத்தை குறிக்கலாம். ஆனால் அறிவியலாளர்கள் பெரும்பான்மையினர் இச்சொல்லை ஐரோப்பவை மையமாக கொண்டு நிகழ்ந்த தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்தையே ஆரம்பமாக வைத்து கணக்கிடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் பரவிய காலனிய ஆதிக்கத்தின் விளைவான இய்ற்கை வளங்களின் சுரண்டலின் பாதிப்பையே அந்த்ரோபோசீனின் தொடக்கமாக வரையருக்கின்றனர். இது சுற்றுசூழலில் ஒரு சில தொடர் மாற்றங்களையும் பூமியின் தட்ப வெட்ப வேதிய நிலைகளில் சரி செய்ய முடியாத மாற்றத்தின் தொடங்கியது எனலாம்.
அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடி புகுந்து அங்கு இருந்த பூர்வ குடியானவர்களை அழித்து 'புதிய உலகை' தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்டனர். இதற்கு தூண்டுதலாக் இருந்தது முதலாளித்துவ தத்துவத்தை முழுமையாக கிரகித்து இருந்த பொருளாதார சிந்தனைகளும் அதனை ஆதரித்த அரசாட்சிகளும் நாடுகளுமே.அத்துடன் மத ரீதியாக மனிதனுக்கு இயற்கையின் மீதான இருந்த உரிமையும் இயற்கையை அழித்து பண்படுத்த வேண்டிய மனிதனின் கடமை தொடர்பான நம்பிக்கைகளுமே துணை நின்றது. ஆனால் இப்போது வரலாற்றை மறு பருசீலனை செய்து பார்க்கின்ற புது யுக்திகளால், மனிதனின் போக்கை நிர்ணயம் செய்த மதத்தின் ஆதிக்கம் குறைந்து விட்டது எனலாம். இந்நிலையில் பூமியில் ஆழமாக பொதிந்து விட்ட மனிதனின் கால்தடத்தின் பாதிப்புகளைப் பகுத்தாய்ந்து எஞ்சியுள்ள உயிருள்ள உலகின் ஆயுளை நீட்டிப்பதற்கான பயணம் தொடங்கிவிட்டது.அதன் முதல் படியாக மனித குலத்தையும் தாண்டி அனைத்து பல்லுயிர்களையும் இந்த பூலோகத்தின் ஒட்டுமொத்த மாற்றங்களையும் அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதே. பின்னர் அழிவைத் தடுப்பதற்கான சாத்தியங்களை சிந்திக்க வேண்டும்.உலகின் அரசியல் பொருளாதாரம் முதல் நமது தனி மனித வாழ்க்கை முறை மாற்றம் வரையான யுக்திகளைச் செயல்படுத்துவதே இந்த உலகில் மனிதன் அழியாமல் நிலைக்கவும், இந்த பூவுலகம் பட்டுப்போகாமல் இருக்கவும் ஒரே வழி.
இத்தொடரில் இந்த பயணத்தை ஒரு சில ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய மகேஸ் ரங்கராஜன் அவர்களின் புதிய வெளிவர உள்ள புத்தகத்தில் (மகேஸ் ரங்கராஜனின் "இயற்கையின் விளிம்பில் - (சுற்றுச்சுழல்) உலகின் தற்போதய நிலையும் நீண்ட கால வரலாறும்" ) இடம் பெற்றுள்ள கட்டுரைகளை வாசித்தும் அதை பற்றிய கருத்துக்களை பகிர்வதுடனும் தொடங்கியுள்ளேன். இது நம்மை உலகின் எல்லா இடங்களுக்கு இட்டுச்செல்வதுடன் ‘மனிதனின் கால்தடம்’ என்பதை விரிவாகவும் முழுமையுமாக தெரிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் உதவும் என நம்புவோம்.
Comments
Post a Comment
Thank you for reading. Really appreciate your time. Would be great if you could share your thoughts about the article you just read. Will be happy to discuss about it. Little bit of discussion helps! Always!