Skip to main content

Posts

Showing posts from July, 2021

பள்ளிக்கூடங்களிலும் கற்றல்... தெருக்களிலும் கற்றல்...

கல்வி என்பது சில புத்தகங்களை வாசித்து, சில தேர்வுகளில் தேர்ச்சிபெறுவதுடன் முடிந்து விடுவது இல்லை. அது நம் பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கை முழுவதும் நிகழும் ஒரு தொடர் நிகழ்வு. – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி   கல்வி என்பது என்ன? அது எவ்வாறு இருக்க வேண்டும்?  கல்வி என்பது சமூக முன்னேற்றதிற்கான கருவி. பள்ளிகள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. முன்னேற்றம் என்பது ‘தற்பொழுது உள்ள நிலைகளைக் கடந்து, யாரோ ஒருவர் வகுத்த வேறு ஒரு மேம்பட்ட நிலையை அடைவது’ என்ற கண்ணோட்டம் ஒன்று உள்ளது. இந்த கண்ணோட்டத்தினால் மேலோங்கி நிற்கும் கருத்து, ‘சமூகத்தில் தற்பொழுது உள்ள நிலையில் எதுவுமே கற்கவோ பகுத்தாயவோ ஆவணப்படுத்தவோ மேம்படுத்தவோ தேவை இல்லை’. இதனால் கல்வியின்  உள்ளடக்கம் தற்போதைய  சமூக நிலைகளுக்கு அப்பாற்பட்டு இருக்க அன்றாட வாழ்க்கை சம்பவங்களும் நடைமுறைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கல்வி என்பது கற்பவர்களின் அன்றாட வாழ்வோடு தொடர்பற்று இருக்கின்றன. மனிதர்களின் பரிணாம வளர்ச்சியைப் போல, இந்த கல்வியும் அதனைச் செயல்படுத்தும் கருவிகளும் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும். ...