கல்வி என்பது சில புத்தகங்களை வாசித்து, சில தேர்வுகளில் தேர்ச்சிபெறுவதுடன் முடிந்து விடுவது இல்லை. அது நம் பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கை முழுவதும் நிகழும் ஒரு தொடர் நிகழ்வு.
– ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
கல்வி என்பது என்ன? அது எவ்வாறு இருக்க வேண்டும்?
கல்வி என்பது சமூக முன்னேற்றதிற்கான கருவி. பள்ளிகள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. முன்னேற்றம் என்பது ‘தற்பொழுது உள்ள நிலைகளைக் கடந்து, யாரோ ஒருவர் வகுத்த வேறு ஒரு மேம்பட்ட நிலையை அடைவது’ என்ற கண்ணோட்டம் ஒன்று உள்ளது. இந்த கண்ணோட்டத்தினால் மேலோங்கி நிற்கும் கருத்து, ‘சமூகத்தில் தற்பொழுது உள்ள நிலையில் எதுவுமே கற்கவோ பகுத்தாயவோ ஆவணப்படுத்தவோ மேம்படுத்தவோ தேவை இல்லை’. இதனால் கல்வியின் உள்ளடக்கம் தற்போதைய சமூக நிலைகளுக்கு அப்பாற்பட்டு இருக்க அன்றாட வாழ்க்கை சம்பவங்களும் நடைமுறைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கல்வி என்பது கற்பவர்களின் அன்றாட வாழ்வோடு தொடர்பற்று இருக்கின்றன.
மனிதர்களின் பரிணாம வளர்ச்சியைப் போல, இந்த கல்வியும் அதனைச் செயல்படுத்தும் கருவிகளும் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும். சமீபக் காலங்களில் கல்வியில் சில நேர்மறை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அனைத்துப் பாடத்திட்டங்களிலும் 'கற்றல் என்பது அன்றாட வாழ்வோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்துவதுடன் பாடப்புத்தகங்களிலும் இதற்கான செயல்திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மாற்றம் மட்டும் போதுமானதாக இல்லை. கல்வி மற்றும் கற்றல் போன்றவற்றில் நமது கண்ணோட்டங்களும் செயல்பாடுகளும் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. சமீபத்தில் நான் வாசித்த ஒரு புத்தகம் மேல்குறிப்பிட்டுள்ள சிந்தனைகளை எனக்குள் தூண்டியது.
தெருக்களே பள்ளிக்கூடம் என்ற புத்தகம் தான் அது. இது ராகுல் அல்வரிஸ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘Free from school’ என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு. சுஷில்குமார் அவர்களின் மொழிபெயர்ப்பில் குக்கூ காட்டுபள்ளியின் தன்னறம் நூல்வெளி வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கூடங்கள் கல்வியைப் பரவலாக்கும் ஒரு முக்கிய கருவி, ஆனால் கற்றல் என்பது பள்ளிகளுக்குள் மட்டுமே நடப்பது இல்லை. இதனைத் தனது பதினாறாம் வயதில் உணர்ந்த ராகுல் அல்வரிஸின் ஒரு வருட கற்றல் பயண அனுபவமே இந்தப் புத்தகம்.
இந்தப் பயணம் தனது சொந்த ஊரில் உள்ள வளர்ப்பு மீன் கடையில் துவங்கி விவசாயம், தாவரத்திருவிழா, நீண்ட பயணங்கள், காளான்கள், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் சார்ந்த கருத்தரங்குகள், பாம்புகள், மண்புழுக்கள், சிலந்திகள், முதலைகள், காடுகள், வெவ்வேறு ஊர்கள் (கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா), விதவிதமான மக்கள் என்று பலவிதமான அனுபவங்களுடனும் உற்சாகத்துடனும் செழிப்பாக கழிந்ததை மிகவும் விவரமாகப் பகிர்ந்துள்ளார். ஒரு மாணவராக துவங்கிய ராகுல் ஒரு வருடத்திற்குள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றின் சிறப்பு விருந்தினராக மாறினார். இந்த ஒரு வருடத்தில் அவர் அனுபவித்த இனிமையான அனுபவங்கள், ஏமாற்றங்கள், வலிகள், பயணங்கள் மற்றும் கற்றல் அனுபவங்கள் அவருக்கு தகவல்களையும் சில திறன்களை கற்றுக் கொடுப்பதுடன் அவரை வாழ்க்கைக்காக தயார் செய்தது என்றும் கூறலாம். அவர் ஒவ்வொரு மாணவரும் இது போல ஒரு இடைவெளி எடுப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார்.
அன்றைய நாளில் நான் கற்றுக்கொண்ட அல்லது பார்த்த
விசயத்தைப் பற்றி தகவல்களை நான் எப்போதுமே மிகுந்த விருப்பத்துடன் (நூலகத்தில்
உள்ளப் புத்தகத்தில்) தேடுவேன். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், இந்தத்
தகவல்களையெல்லாம் எந்தவொரு தேர்வுக்காகவும் மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கவில்லை,
இருந்தாலும் நான் வாசித்த எந்தவொரு விசயமும் ஏன் தலையைவிட்டுப் போகவில்லை. – புத்தகத்தில்
மாமல்லபுரம் முதலைப் பண்ணையின் அனுபவப் பகிர்வின் பகுதியில் இருந்து.
இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒரு அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடப்புத்தகத்திற்கான பாடமாக சேர்க்கும் அளவுக்கு விவரமாகவும் சுவாரசியமாகவும் உள்ளன. நேரடி அனுபவங்களைப் பெற்ற ஒரு பதினாறு வயது சிறுவன் எழுதியது என்பது மேலும் சுவாரசியம் ஊட்டக்கூடியதாக உள்ளது. ஒருவரின் ஆர்வம் சார்ந்த அனுபவங்கள் சிறப்பான கற்றல் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொடுக்க முடியும் என்பதற்கு இந்த புத்தகமே ஒரு நிரூபணம்.
அவரது திட்டமிடலும் அவருக்கு இருந்த தொடர்புகளும் தான் இந்த ஒரு வருடத்தைச் சிறப்பாக மாற்ற அவருக்கு உருதுணையாக இருந்தது. பல துறைகளில் பல ஊர்களில் இருந்த அவரது குடும்ப நண்பர்கள் பலருடன் அறிமுகப்படுத்தி வழிகட்டுவதில் தொடங்கி அனுமதிகள் பெறுவது, தங்க இடமளிப்பது, ஊரைப் பழக்கப்படுத்துவது, என்று பல உதவிகளை வழங்கயுள்ளனர்.
புத்தகத்தைப் படிக்கும் பொழுதும் படித்து முடித்ததும், நம்முள் பல கேள்விகள் எழுகின்றன. எனக்கு தோன்றிய கேள்விகள் சில,
- இது போன்ற ஒரு வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் வாயிக்கப்பெறுமா? குறிப்பாக வருமானத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சாத்தியமுள்ள வகையில் எவ்வாறு இதனைப் பரிந்துரைப்பது?
- ஒரு சிறிய பயிற்சிக்கு அல்லது அனுபவத்திற்காக சென்று அதனையே தங்கள் தொழிலாக மாற்றி கொள்வார்களா?
- இது போன்ற அனுபவத்தைக் கொடுத்து மாணவர்களின் உலகம் சார்ந்த கண்ணோட்டத்தை வளப்படுத்தி அவர்களின் தேடலை எவ்வாறு மேம்படுத்துவது?
இவ்வாறான கேள்விகள் தான் வழிகளையும் தீர்வுகளையும் தேட வைக்கும். இது போன்ற வாசிப்பு பல கண்ணோட்டத்தையும் அனுபவங்களையும் கொடுத்து நம்முள் கேள்விகளை எழுப்பி தீர்வுகளை நோக்கி நகர செய்கின்றன.
இது அனைவருக்குமான புத்தகம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
சமூகத்தைப் பற்றிய, சுற்றுச்சூழலைப் பற்றிய சிந்தனை இன்றியும் சிந்திக்க மனமின்றியும் தலைமுறைகள் உருவாகி தற்போதைய பல சிக்கல்கள் முற்று பெறாமலும் சிக்கல்கள் மேலும் சிக்கலாகியும் உள்ளன. இன்றையப் பெருஞ்சிக்கல்களான இயற்கைச் சீரழிவு, சுற்றுச்சூழல் சீர்கேடு, சமூக நிலையற்றத் தன்மை, அதிகரிக்கும் வன்முறைகள் போன்றவற்றை எதிர்கொள்ளவும் அதனைத் தீர்க்கவும் கல்வி மிகவும் தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும்.
கல்வி என்பது ஒரு சமூதாயத்தின் மேம்பட்ட நிலையை நோக்கிய பயணம். நம் சமூகத்தையும் சூழலையும் அதன் தற்போதைய நிலையையும் ஆழமாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக கல்வி இருக்க வேண்டும். சமூகத்திற்கும் அதன் தேவைகளுக்கும் இடையே தொடர்பாற்றி உயிரோட்டமுள்ளதாக இருக்க வேண்டும். கல்விக்கான ஆழமானக் கோட்பாடுகளை உள்வாங்காமல் கற்கும் கல்வி சுவாரசியமற்று இருப்பது மட்டுமன்றி, பொருத்தமற்றும் பயன்பாடற்றும் உள்ளது. இந்த நிலைத் தொடக்க கல்வியில் துவங்கி கல்லூரி மேற்படிப்பு வரை உள்ளது என்பது ஒரு வருத்தத்திற்குரிய நிசர்தனம்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? யார், எவ்வாறு, எங்கு, எப்படி செய்ய செண்டும்? இப்பொழுது கல்வியில் நாம் காணும் சில மாற்றங்கள் போதுமானதாக உள்ளதா? கருத்துக்களைப் பகிரலாம். தொடர்ந்து உரையாடலாம்........................
Yes, everyone can contribute to it. Every act which degrades nature begins from human. Lets change our acts of using inorganic materials and follow using organic materials. Like avoid using plastics of all kinds or use only recyclable products. Increase practicals more in educational institutions than theoritical classes. Increase physical activity of students.
ReplyDeleteAwesome Topic. Thank you so much for the energy and write-up, Soundar. It’s very crucial and important to build our next generation in right way. Keep up your good works. Thanks.
ReplyDeleteGreat write-up,
ReplyDeleteWell written
ReplyDeleteமிக முக்கியமானக் கருத்துக்களை முன் வைத்திருக்கிறீர்கள் சௌந்தர். இந்தக் கட்டுரையைப் படிக்கும்பொழுது எழுந்த எண்ணங்களைப் பகிர்கிறேன்.
ReplyDeleteபணம் ஈட்டுவதற்கான ஒரு தயாரிப்பு என்ற அளவிலேயே கல்வி பார்க்கப்படுகிறது. சமூகத்தைப் புரிந்து கொண்டு அதன் மேம்பாட்டிற்கானத் தேவையை உணர்ந்து, தன்னைத் தகுதிப் படுத்திக் கொண்டு தனது பங்களிப்பை ஆற்ற மாணவர்களுக்கு நம் கல்வி முறை துணை புரிவதில்லை.
மேலும், மேம்பாடு என்பது பொருளாதார வளர்ச்சியே , என்று வரையறை
வேரூன்றியிருப்பதால், கல்வியும் பொருளாதார வளர்ச்சியை நோக்கியே நடக்கின்றது.
பொருளாதார வளர்ச்சி மட்டுமே வளர்ச்சி அல்ல என்ற தெளிவும், முழுமையான வளர்ச்சிக்கான செயல்பாடுகளுக்கான அரசியல் அங்கீகாரமும் கிடைக்கையில், கல்வியும் அத்தகைய வளர்ச்சி செயல்பாடுகளுக்கு மனிதர்களைத் தயார்படுத்தும்.
பொருளாதார வளர்ச்சியைக் கல்வியின் குறுகிய குறிக்கோளாகக் கொண்டாலும் கூட, அதற்கு தேவையான மொழி அறிவையும், கணித அறிவையும் கூட பல பள்ளிக்கூடங்கள் தருவதில்லை என்பதும் நிதர்சனம்.
மிக அருமையான பதிவு. கல்வி ஒருவனை சிந்திக்க வைக்க துண்டுகோளாய் அமைய வேண்டும். அச்சிந்தனையே வகுப்பறையினை தாண்டி சமூகத்தை நோக்கிய பயணத்தை அளிக்கும். கல்வி பரினமிக்கட்டும்.
ReplyDeleteExcellent write up sir.
ReplyDeleteஆழமான புரிதல். அழகாக எளிய நடையில் மன உணர்வுகள். உங்கள் பேச்சில் வெளிப்படுவது எழுத்திலும் எதிரொலிக்கிறது. முடிந்ததை முயலுவோம். முடியாததை கருத்திலே நிறுத்தி எண்ணங்களால் ஒன்றிணைவோம். தொடர்ந்து எழுதுங்கள் செளந்தர்.
ReplyDelete