சமீபத்தில் பேசு பொருளாகி உள்ள பாண்டி கடற்கரையி ன் மணற்பாங்கான தோற்றம் எனக்குள் உதிர்த்த ஒரு சிறிய எண்ணோட்டப் பதிவு. புதுச்சேரி கடற்கரை ஒரு இனிமையான காலை பொழு து. பாறைகளுடன் காட்சியளித்த புதுச்சேரி நகரத்தின் கடற்கரையில் மணலைக் கண்டதும் சிலர் , ‘கடல் உள்வாங்கியிருக்கு!! ’ என்று கூறிவிட்டு வேகமாக நடையைக் கட்டினர். அவர்களுள் சிலர் கடலை சிறிது நேரம் நோட்டமிட்டு பின்பு ஆழ்ந்து யோசனை செய்வதைப் போல் நின்று விட்டு கடந்து சென்றனர். அதே மணல் வெளிப்படும் கடற்கரை பகுதியில் தெற்கில் இருந்து வரும் ஒரு பெரிய குழாயில் இருந்து கருமையான நீர் பீறிட்டுப் பாறைகளைத் தாண்டி கொட்டிக் கொண்டிருந்தது. அருகில் நாற்காலியில் அமர்ந்து இருந்தவரிடம் , சிலர் ‘என்ன?’ வென்றும் , சிலர் ‘ஏன் சாக்கடை நீர் கடலில் கொட்டப்படுது? ’ என்றும் விசாரித்தனர். விசாரித்தவர்களிடம் ‘மண் கொட்டி பீச் (கடற்கரை) ஆக்கப்படுது’ என்று அவர் பதிலளித்தார். ஆனால் கடற்கரைக்கு வரும் பலரின் கவனம் இதன் மேல் இருந்தது போல் தோன்றவில்லை. இதைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கலாம் அல்லது தெரிந்துகொள்வதில் ஆர்வம் இன்றி இருக்கலாம் அல்லது...
புத்துணர்ச்சி ஊட்டும் இயற்கையை நோக்கி...