சமீபத்தில் பேசு பொருளாகி உள்ள பாண்டி கடற்கரையின் மணற்பாங்கான தோற்றம் எனக்குள் உதிர்த்த ஒரு சிறிய எண்ணோட்டப் பதிவு.
புதுச்சேரி கடற்கரை
ஒரு இனிமையான காலை பொழுது. பாறைகளுடன் காட்சியளித்த புதுச்சேரி நகரத்தின் கடற்கரையில் மணலைக் கண்டதும் சிலர், ‘கடல் உள்வாங்கியிருக்கு!!’ என்று கூறிவிட்டு வேகமாக நடையைக் கட்டினர். அவர்களுள் சிலர் கடலை சிறிது நேரம் நோட்டமிட்டு பின்பு ஆழ்ந்து யோசனை செய்வதைப் போல் நின்று விட்டு கடந்து சென்றனர். அதே மணல் வெளிப்படும் கடற்கரை பகுதியில் தெற்கில் இருந்து வரும் ஒரு பெரிய குழாயில் இருந்து கருமையான நீர் பீறிட்டுப் பாறைகளைத் தாண்டி கொட்டிக் கொண்டிருந்தது. அருகில் நாற்காலியில் அமர்ந்து இருந்தவரிடம், சிலர் ‘என்ன?’ வென்றும், சிலர் ‘ஏன் சாக்கடை நீர் கடலில் கொட்டப்படுது?’என்றும் விசாரித்தனர். விசாரித்தவர்களிடம் ‘மண் கொட்டி பீச் (கடற்கரை) ஆக்கப்படுது’ என்று அவர் பதிலளித்தார்.
ஆனால் கடற்கரைக்கு வரும் பலரின்
கவனம் இதன் மேல் இருந்தது போல் தோன்றவில்லை. இதைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கலாம்
அல்லது தெரிந்துகொள்வதில் ஆர்வம் இன்றி இருக்கலாம் அல்லது இந்த மாற்றத்தைக் கண்டு கொள்ளாமலும் கண்டு கொள்ள அக்கறை இன்றியும் இருந்திருக்கலாம்.
கண்டு கொள்ளாமல் விடுவது ஏன்? ஏன் பலருக்கும் இதனுள் அக்கறை இல்லை? கண்டு கொண்டாலும் அக்கறையுடன் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாதது ஏன்?
இவ்வாறான அக்கறையின்மை அல்லது கண்டுகொள்ளாமை என்ற எனது கணிப்பு தவறாக இருக்க வேண்டும் என்றே நானும் எண்ணுகிறேன்.
நாம் கீழ்வரும் கேள்விகளுக்கு பதில் தேட விழைவோம்.
· பாண்டியில் மணற்பாங்கான கடற்கரை இருந்ததா? ஆம் என்றால் எப்பொழுது?
· பெரிய பாறைகள் ஏன் கடலில் கொட்டப்பட்டுள்ளது?
· முதன்மையாக ஏன் பாண்டியில் கடல் அரிப்பு ஏற்பட்டது?
· அதற்கு தீர்வு இந்த பெரிய பாறைகளால் ஆன கடற்சுவர் தானா?
· இந்த பாறைகள் எங்கிருந்து வருகின்றன?
· பாறைகள் வெட்டப்படுவதால் மலைகள் சுரங்கங்கள் உள்ள இடங்களில் பாதிப்பு ஏற்படுகிறதா? ஆம், என்றால் என்ன பாதிப்பு?
· இந்த கடல் அரிப்பு பாண்டி நகரின் தெற்கே ஏன்
இப்படியான கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தவில்லை?
· இந்த அரிப்பு என்பது வடக்கில் மெல்ல நகர்வது ஏன்?
· முன்பும் சில நேரங்களில் சில இடங்களில் மணற்பாங்கான
பகுதி இந்த கடற்கரையில் ஏற்பட்டதே, அது எவ்வாறு?
· பல வருடத்திற்கு பிறகு இப்பொழுது காந்தி சிலை மற்றும்
‘லே பாண்டி’ இருக்கும் இடங்களில் மணற்பாங்கான கரை தெரிவது எவ்வாறு?
· கடல் உள்வாங்குதல் என்றால் என்ன? எப்பொழுது எல்லாம் நிகழும்? அந்த நிகழ்வை சாதாரணமாக கடந்து
செல்லலாமா?
· இப்பொழுது கொட்டப்படும் மணல் எங்கு இருந்து வருகிறது?
· அந்த மணல் அள்ளப்படும் பகுதியில் என்ன விதமான நேர்மறை அல்லது எதிர்மறை மாற்றங்கள் நிகழும்?
· இப்பொழுது கொட்டப்படும் மணலும் அதனால் தோன்றும் கரை நிரந்தமானதா? இல்லை என்றால் என்ன செய்து தக்கவைக்க முடியும்?
· இந்த மணலின் முக்கியத்துவம் என்ன? இதனால் பாண்டி நகரம் கடல்
அரிப்பில் இருந்து தப்புமா?
கடல் உள்வாங்கியதா? கடற்கரையில் நடப்பது என்ன?
பாண்டி கடற்கரை பல வருடங்களுக்கு முன்பு மணற்பாங்கான கடற்கரையாக தான் இருந்தது. அதன் 'பாறை'பாங்கான தோற்றத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் துறைமுக சார்ந்த கட்டமைப்பு, குறிப்பாக கழிமுகத்தின் (துறைமுக முகத்துவாரத்தின்) தெற்கே வடமேற்கு திசையாக அமைந்து உள்ள கற்சுவர். இது மணலின் ஓட்டத்தினைத் தடுக்கும் ஒரு மணல் அணை போல செயல்படுகிறது. இதனால் தெற்கே (வீராம்பட்டினம் பகுதியின்) கடற்கரை விரிவடைவதையும் காணலாம். வடக்கே கடற்கரை அரிப்பு முதலியார் சாவடி (ஆரோவில் கடற்கரை) வரை சென்று விட்டது என்பதற்கு அங்கு காணப்படும் பெரிய பறைகள் நிறைந்த கற்சுவர்களே சாட்சி.
கடற்கரையில் மணற்பரப்பு சிறிய அளவில் பல முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது கடற்கரை நெடுகிளும் மணற்பரப்பு தென்படுகிறது. இது 'மணற்பரப்பு மீட்பு பணிகள்' என்ற வகையில் கழிமுகத்தில் தூர்வாரிய மணலைக் கடற்கரையில் பெரிய குழாய்களின் மூலம் கொட்டப்படுவதால் வந்த மாற்றம். தூர்வாரப்பட்ட மணலை நாம் கலங்கரை விளக்கத்தின் தெற்கே மணல் குன்றுகளாகப் பார்த்திருக்க கூடும். அந்த மணல் குன்றுகள் இப்பொழுது சுருங்கி வருவதையும் பார்க்க முடியும். அந்த மணல் குன்றுகளே இப்பொழுது கடற்கரை மணற்பரப்புகளாக மாற்றம் பெற்று வருகின்றன. இந்த பணி கடல் அரிப்பை தடுக்க உதவுவதுடன் நகரத்திற்கு ஒரு அழகிய மணற்பாங்கான கடற்கரையையும் கொடுத்துள்ளது.
ஆம், பெரிய குழாயில் வருவது சாக்கடை நீரும் அல்ல, மணற்பாங்கான கடற்கரை தோற்றம் கடல் உள்வாங்குவதனாலும் அல்ல.
புதுச்சேரி (பாண்டி) கடற்கரை என்பது பலருக்கு பல
கோணங்களில் ஒரு புத்துணர்ச்சியூட்டி. உள்ளூர்வாசிகளுக்கு காற்று
வாங்கவும் காலாற நடக்கவும் உடற்பயிற்சி செய்யவும் நட்புறவாடவும் குழந்தைகள் சுதந்திரமாக இனிமையாக விளையாடவும்
அனைவருக்குமான ஒரு பொது வெளியாக உள்ளது. வெளியூரில் இருந்து சுற்றுலா வருவோருக்கு கண்டிப்பாக
பார்க்க வேண்டிய (bucket list) பிரெஞ்சு கால கட்டிட மற்றும் நகர அமைப்பைப்
பார்க்கும் ஒரு இடமாகவும் கடற்கரையை ரசிக்கும் ஒரு இடமாகவும் உள்ளது. மேலும் சுவையான
தின்பண்டங்கள் கிடைக்கும் மற்றும் இனிமையான கலை நிகழ்ச்சிகள் கண்காட்சிகளைக்
காணும் இடமாகவும் உள்ளது.
இவ்வாறு அனைவருக்குமானதாக உள்ள கடற்கரையைப்
பற்றி மேலும் தெரிந்து கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை விழிப்புடன் நோக்கி இந்த பொது
இடத்தினை ‘பொதுவாக அனைவரும் அறிந்த இடமாகவே’ விளங்க செய்வோம்.
- கடற்கரை மணல் பற்றி - http://natureism.blogspot.com/2018/09/blog-post.html
- துறைமுகத் துவாரம் தூர்வாரல்: புதுவை கடற்கரையில் மீண்டும் உருவாகும் மணற்பரப்பு: https://www.hindutamil.in/news/breaking-news/720459-port-borehole-dredging-re-emerging-sand-dune-on-puduvai-beach.html
- இந்த காணொளியைக் கண்டு மேலுள்ள கேள்விகள் சிலவற்றுக்கு பதில்கள் அறியலாம். India's disappearing beaches - a wake up call (இந்தியாவின் காணாமல் போகும் கடற்கரைகள்) https://www.youtube.com/watch?v=KgTn6Qpgjok
முதன்மையாக நாம் அனைவரும் புதுச்சேரியின் இந்த புதிய புத்துணர்ச்சி ஊட்டும் கடற்கரையை அனுபவிக்கலாம்.
மேலும் இது போன்ற பல நல்ல மாற்றங்கள் நமது நகரங்களில் நிகழ வேண்டும். இதனைப் போன்ற மாற்றங்கள் நமக்கு உணர்த்தும் 'நகரங்களில் இருக்கும் இயற்கை சார்ந்த போது இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை' என்ற படிப்பினையையும் ஆழமாக உள்வாங்க வேண்டும். இவற்றின் மூலம் நிலைத்திருக்கும் விசயங்களைப் பாதுகாக்கவும் நல்ல மாற்றங்களை ஆதரிக்கவும் அந்த மாற்றத்தை நிலைக்க செய்யவும் நாம் அனைவரும் சேர்ந்து பங்கு பெற வேண்டும்.
நமது அனுபவங்கள் மற்றும் தேடல்களின் மூலம் நமது
நகரத்தைப் பற்றியும் அதன் பொது இடங்கள் பற்றியும் விழிப்புடன் இருப்போம்.
சிந்திப்போம்! விழிப்புடன் இருப்போம்!!
👏👏👏👏👏
ReplyDeleteவெகுநாட்களாக விடை தெரியாமல் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது! உங்கள் ஆழமான சிந்தனைக்கும், நிதானமான தெளிவுறைக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி.
DeleteSuper sir.... Learnt new things..
ReplyDeleteBut you haven't answered all the questions that you have asked 😛
Thank you. The purpose of the article is just to find a reason for sandy beach in Pondy. The answers for the questions can be explored by the reader. Otherwise the article might be long.
DeleteMany don't know about the reason for the change in Pondy beach and you have explained in detail, very nice uncle 👏🏻👏🏻👌🏻👌🏻
ReplyDeleteThank you. Do share with anyone who need to know more.
Deleteகடல் அரிப்பு பற்றிய ஆழமான பதிவு சௌந்தர். இப்போதே என் உள்ளத்திற்கு நெருக்கமான பாண்டி beachஐ பார்த்திட அவா. முன்பு Le Pondyயின் பின் முகப்பிற்கு கடற்கரையிலிருந்து நுழைய பெரியஅரைவட்ட படிகள் இருக்கும். கடல் அரிப்பினால் அவை மறைந்தன. கரையில் விளையாடியபின் அந்த படிகளில் ஓடி ஏறி cone ice cream வாங்கி அது ஓட்டையாகி மணிக்கட்டு வரை ஒழுகி ... மனதில் கொசுவர்த்தி சுருளை சுற்றி விட்டாய் தம்பி. நல்ல எழுத்து முயற்சி தொடர்ந்திட வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி முத்து அவர்களே. உங்களது அனுபவங்கள் சுவாரசியமானவை. இந்த காலத்து குழந்தைகளுக்கும் அதே அனுபவம் தோடர்ந்து கிடைக்கும் என்று நம்புவோம். கடற்கரை மணலுடன் தொடர்ந்து காட்சியளிக்கும் என்றும் எதிர்நோக்குவோம்.
Deleteநானும் குழாயில் வருவது சாக்கடை நீர் என்று தான் நினைத்திருந்தேன். இருந்தாலும் ஒரு சந்தேக மனதில் இருந்தது. இது நாள் வரை இல்லாத இந்த சாக்கடை குழாய் தற்போதுமட்டும் ஏன் வந்தது என்று..ஆனால் நான் அந்த குழாயிலிருந்து வரும் நீரை நேரில் பார்க்கும் போது கருப்பாக கழிவு நீர் போன்று தான் வந்தது...தங்கள் கட்டுரை எனது சந்தேகத்திற்கான தெளிவை அளித்துள்ளது..மிகவும் அருமை சௌந்தர். இன்னும் இது போன்ன்று பல படைப்புக்களைப் படைக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteHey,
ReplyDeleteyour post is very informative,i agree with your thought that we all should work so that good things sustaine in our environment