மாலையில் தவழும் முல்லை பெரியாறு |
பென்னி
குக்கின் பெருமையை பறைசாற்றி,
முல்லையாற்றின்
ஈரம் நனைத்து,
கேரளத்தின்
நறுமணத்தை நுகர்ந்து,
கொடையின்
குளிரில் குளிர்ந்து,
மேகங்கள்
தவழும் மேகமலையில் தவழ்ந்து,
வருசநாட்டில்
வடிந்து, வைகையால் வளம் கொழித்து,
தென்மேற்கு
பருவக்காற்றில் தேகம் நினைந்து,
வானமே
கூரையாய் அமைய,
மேற்கு
தொடர்ச்சி மலையை அரணாய் அமைத்து,
தேனிசையும், தெம்மாங்கும்
தெவிட்டாத கிராமங்களால்,
தமிழகத்தையே
தன்னகத்தே கொண்டிருக்கும்,
தேனியில்......பாளையத்திலிருந்து..
பச்சைக்
கம்பளத்திற்கு நடுவே பயணிக்கும் போது,
ஆகாயத்தின்
மேகங்களுக்கு நடுவே,
அசைந்து
கொண்டிருக்கும்..
பனிமய
அன்னை ஆலயத்தின் சிலுவை சிலிர்த்து,
ஆலய
மணியின் ஓசையில் எழுந்து,
உலகத்தின்
உணவுக்காக உழைத்துக் கொண்டிருக்கும்
உன்னத
உழவர்கள் நிறைந்து,
தேனிக்கும், தென்
தமிழகத்திற்கும்,
கேரளத்திற்க்கும்
கலங்கரை விளக்காக,
கல்வி
ஒளி வீச,
ஊரின்
முத்திசையிலும் முத்தாய் வீற்றிருக்கும்,
மும்
மேல்நிலைப் பள்ளிகளைக் கொண்டு,
பல்வேறு
(இனங்களையும்) மனங்களையும்,
ஓர்
இனமாய் கொண்டு,
மண்ணையும், பெண்ணையும்
மகிமைப் படுத்தும்
சிறப்பு
வாய்ந்த ஊரிலுள்ள.
என்
அன்னையின் மடியையும்,
இயற்கை
அன்னையின் மடியையும் தேடி
தினந்தோறும்...
புதுச்சேரி
கடற்கரை அலைகளில்
எனது
மனதினை
அலைபாய
விட்டுக் கொண்டிருக்கின்றேன்...
Comments
Post a Comment
Thank you for reading. Really appreciate your time. Would be great if you could share your thoughts about the article you just read. Will be happy to discuss about it. Little bit of discussion helps! Always!